• திருவேற்காடு – கருமாரியம்மன்

  நேற்று உறவினர் ஒருவரை சந்திக்க, அம்பத்தூர் வரை செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த கிளம்பி அம்பத்தூர் எஸ்டேட் தாண்டும் வரை வேறு எங்கும் செல்லும் என்னமோ திட்டமோ இல்லை. எஸ்டேட் தாண்டி ஓ டி செல்லும் வழியில் திருவேற்காடு செல்லும் சாலை வரும். அங்கு ஒரு தகவல் பலகை வைத்திருந்தார்கள். எதேச்சையாக அதைப் பார்த்தவுடன் மனம் விரைவாக திட்டமிட ஆரம்பித்தது. உறவினர் வீட்டிற்கு சென்றவுடன், முதல் வேலையாக மொபைலில் நோண்டி வழியும் தொலைவும் பார்த்துக் கொண்டேன். பின்,…

  Read more
 • இரவு

  மெல்லக் கண்களைத் திறக்க முற்பட்டேன். எங்கு நோக்கினாலும் இருட்டாய் இருந்தது. எங்கே இருக்கிறேன் எனப் புரியவில்லை. எழ முற்பட்ட என்னை உடல் அனுமதிக்கவில்லை. பலக் கற்களை உடலில் கட்டியது போன்ற வலி. முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடினேன்.  நான் எப்படி இங்கே வந்தேன். என்ன நடந்தது. மெதுவாய் அன்று நடந்தது என் கண்களில் ஓடியது. இரவு 10 : 00 எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு…

  Read more
 • அமிர்த வித்யாலயா – குழந்தைகள் தினம் …

  திவ்யா படிக்கும் அமிர்த வித்யாலயாவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. கேஜி மாணவர்களுக்கென தனியாக கிட்டீஸ் டே (குழந்தைகள் தினம்) தனியாக நடத்தினர். குழந்தைகளின் கலாச்சார நிகழ்வுகளும் இருந்தது. இதற்கென இரண்டு மாதங்களாய் கேஜி ஆசிரியைகள் மெனக்கெட்டு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். திறந்தவெளி அரங்கில் மேடை போட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக சொன்ன நேரத்திற்கு சிறப்பு விருந்தினரும் , சென்னை அமிர்தானந்த மயி மடத்தின் பொறுப்பாளரும் மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்….

  Read more
 • தேன் – திவ்யா சொன்னக் கதை

  ஒரு பட்டாம்பூச்சி பறந்துட்டு இருந்தது. அப்ப ஒரு காக்கா வந்துச்சாம். காக்கா , பட்டாம்பூச்சிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டுச்சாம். அதுக்கு பட்டாம்பூச்சி “எனக்கு தேன் வேணும்னு கேட்டுச்சாம் “ . உடனே காக்கா என் கிட்ட தேன் இல்லை. நீ இன்னும் கொஞ்சம் தூரம் போனா நாய் இருக்கும். அதுகிட்ட கேளுன்னு சொல்லிட்டு பறந்து போச்சாம். அதே மாதிரி நாய்கிட்ட போய் கேட்டுச்சாம். அதுக்கு நாய் , என்கிட்ட தேன்லாம் இல்லை. மேகத்துகிட்ட கேளுன்னு சொல்லிட்டு…

  Read more
 • எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்

  “உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்?” . மகா பெரியவாளின் கேள்வி. [மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.) ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார். “உங்களில் எத்தனை பேருக்கு “சாம்பார்” பண்ணத் தெரியும்?”. திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை…

  Read more